சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள தங்கு விடுதிகளில் கேம்ப் ஃபயர் கொண்டாட்டங்களுக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் ஏற்காடு மலைப்பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஏற்காடு தங்கு விடுதிகளில் ஏப்ரல், மே மாதங்களில் கேம்ப் ஃபயருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கோடைக்காலம் முடியும் வரை வனத்துறையினர் தொடர் ரோந்துப்பணி மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.