செல்லப்பிராணிகளுடன் சுனிதா வில்லியம்ஸ் கொஞ்சி விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்தில் கிட்டத்தட்ட 10 மாதங்கள் தங்கியிருந்து கடந்த 19-ம் தேதியன்று சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விண்வெளி மையத்திலிருந்தபோது தனது கணவரையும் தனது செல்லப்பிராணிகளான நாய்களையும் கட்டி அணைக்க வேண்டும் என்று மிகுந்த ஆசை கொண்டிருந்ததாகக் கூறினார்.
இந்த நிலையில், மருத்துவ கண்காணிப்பிலிருந்து வீடு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் நாய்களுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது.