ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து நெருப்பு பிழம்புகளை வெளியேற்றி வருகிறது.
கிரிண்டாவிக் புறநகரில் உள்ள எரிமலை பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதன் காரணமாகக் கட்டுக்கடங்காமல் நெருப்பு பிழம்பு வெளியேறிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாகக் குடியிருப்பு பகுதிகளை நோக்கி நெருப்பு பிழம்புகள் செல்வதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.