புதுச்சேரியில் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ள தற்காலிக ஆளுநர் மாளிகையில் மேற்கொள்ளப்படும் பணிகளை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிரெஞ்சு காலத்தில் கட்டப்பட்ட 250 ஆண்டுகள் பழமையான ஆளுநர் மாளிகையின் கட்டடம் உறுதித் தன்மை இழந்ததால் 14 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்தது.
மேலும், தற்போதைய ஆளுநர் மாளிகையைக் கடற்கரைச் சாலையில் உள்ள கலாச்சார மையத்துக்கு மாற்ற அரசு பரிந்துரை செய்தது. தற்காலிக மாளிகையை அழகுபடுத்தும் பணி தொடங்கி 7 மாதங்கள் கடந்த நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.