கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூருவில் உள்ள விதான சவுதா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ சலவாடி நாராயணசாமி, சட்டப்பேரவையிலிருந்து பாஜக எம்எல்ஏக்கள் 18 பேர் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் சட்டவிரோதமானது என்றும், அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் கூறினார்.