ராமநாதபுரத்தில் உள்ள வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற வழிவிடு முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 83ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதே போல் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்ற சூழலில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.