திருப்பூரில் சாக்கடை வசதி ஏற்படுத்தாமலும், சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றாமலும் அவசர கதியில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், முருகம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சாலையில் சேதமடைந்து இருக்கக் கூடிய மின்கம்பத்தை மாற்றாமலும், சாக்கடை வசதி ஏற்படுத்தித் தராமலும், குடிநீர் குழாய் பதிக்காமலும் அவசர கதியில் சாலைப் பணிகளை மேற்கொள்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 4-வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டுக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அவர்கள் கலைந்து சென்றனர்.