செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் திடீரென பெய்த கனமழையால் முக்கிய வீதிகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மழையில் நனைந்ததால் நெல் மூட்டைகளின் விலை வீழ்ச்சியடையும் என்றும், வெட்டவெளியில் நெல் மூட்டைகள் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டதால் மழையில் நனைந்து சேதமடைந்ததாகவும் கூறினர். மேலும், நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க குடோன்கள் அமைத்து தந்து, நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.