கோடை வெப்பத்தை தணிக்க திருச்சி மறுவாழ்வு மையத்தில் யானைகள் ஆனந்த குளியல் போட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம், எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ஏராளமான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில, கோடை வெப்பத்தை தணிக்க யானைகள் மறுவாழ்வு முகாமில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யானைகளுக்காக நீச்சல் குளம், சேற்று குளியல் ஆகியவை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கூடுதலாக யானைகள் தங்குமிடங்களில் வெப்பநிலையை சீராக்க ஷவர் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், யானைகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் வழங்கப்படுவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்