கடலூர் மாவட்டம், புவனகிரியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
வண்டுராயன்பட்டு பகுதியில் அரசு விதைப்பண்ணை அலுவலகத்தில் புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டு வந்த 8 பேர் மீது சந்தேகம் இருப்பதாக காவல்துறையினருக்கு சிறப்பு புலனாய்வு பிரிவினர் தகவல் அளித்துள்ளனர். பின்னர் 8 பேரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 8 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வரும் நபர்களை பொதுமக்கள் விசாரித்து பணியமர்த்த வேண்டும் என்றும், இல்லையென்றால் ஆபத்தாக முடியும் என காவல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.