மியான்மரில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.
மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை ரிக்டர் அளவில் 7.7 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கம் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தையும், காயமடைந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 500-யும் கடந்துள்ளது. மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.