துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருப்பதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
இப்படம் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி 8 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகாமல் உள்ளது.
இப்படத்தில் பார்த்திபன், விநாயகன், சிம்ரன், ராதிகா, ரிது வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை வரும் மே மாதம் திரைக்கு கொண்டுவர கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.