உதகை அருகே பார்சன்ஸ்வேலி செல்லும் சாலையில் புலி உலா வரும் வீடியோ வெளியாகியுள்ளது
உதகை அருகேயுள்ள மந்து பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புலி தாக்கி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட கேமராக்களை பொருத்தி புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதே பகுதியில் புலி ஒன்று உலா வருவதைப் பொதுமக்கள் தங்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து புலியைப் பிடிக்கும் பணியை வனத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.