கர்நாடகாவில் மகள், மாமியார் உட்பட 3 பேரைச் சுட்டுக் கொன்ற நபர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிக்மகளூரு மாவட்டத்தைச் சேர்ந்த ரத்னகர் என்பவருக்கு மனைவியும், 6 வயதில் மகளும் இருந்தனர். குடும்ப பிரச்சனை காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரத்னகர், தனது மகள், மாமியார் உட்பட 3 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்.
அதைத் தொடர்ந்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.