கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு அரசியல் நடத்தப்படுகிறது என இலங்கை அமைச்சர் ராமலிங்கம் சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் யாழி பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த நீரியல் மற்றும் கடல் வளங்கள் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திர சேகர், தேர்தல் வர உள்ளதால் கச்சத்தீவு பிரச்சனையை ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் கச்சத்தீவு இலங்கை அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்டது என்திட்டவட்டமாகத் தெரிவித்தார்.