நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் கார் பற்றி எரிந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்டர்டாமின் டாம் சதுக்கத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் அங்கு வருகை தந்த நபர் ஒருவர், வேண்டுமென்றே தனது காரில் தீ வைத்தார்.
தொடர்ந்து அவரது உடம்பிலும் தீப்பற்றிய நிலையில், போலீசார் அவரை மீட்டனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்ததை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.