சென்னை ஈசிஆரில் உள்ள கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவன உரிமையாளரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
இந்நிறுவனத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான தகவல்களின் அடிப்படையில், கோகுலம் சிட் பண்ட்ஸ் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளரான கோபாலின் நீலாங்கரை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அவரது மகன் பைஜூ கோபாலிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.