ஓசூரில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் சீதாராம் மேடு பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள், கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சாகசத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.