புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமைந்துள்ள வீரமுனியாண்டவர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோயிலில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்தக் கோயில் நிர்வாகிகளால் திட்டமிடப்பட்டது.
அதன்படி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, கடம் புறப்பாடு நிகழ்வு நடந்தேறியது. இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கக் கோயில் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.