பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ராமேஸ்வரம் வரவுள்ளார். இதன் காரணமாக பாக் ஜலசந்தி மற்றும் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில், இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
3 ரோந்து கப்பல்கள் மூலம் தீவிர பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. கடல் பகுதிகளில் தென்படும் சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க மீனவர்களுக்கு கடலோர காவல் படை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.