இந்து கடவுள்களை அவதூறு பேசிய கேரள எழுத்தாளர் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல்துறையை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் நடைபெற்ற கம்யூனிஸ்டு கட்சி பொது கூட்டத்தில் கேரள எழுத்தாளர் ஷீயாம்குமார், இந்து கடவுள்களை அவதூறு பேசியதாக தெரிகிறது.
இதனைத் தட்டிக்கேட்ட ஆர்.எஸ்.எஸ் வெள்ளாங்கோடு மண்டல பொறுப்பாளர் மீது கம்யூனிஸ்டு கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், 5 நாட்களாக காவல்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், காவல்துறையைக் கண்டித்து அருமனை பகுதியில் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.