கள்ளக்குறிச்சியில் இரு தரப்பு திமுக-வினரிடையே மோதல் வெடித்த சம்பவத்தால் பதற்றம் நிலவியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வருபவர் வைத்தியநாதன். இவருக்கும் திமுக மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ள ராஜவேல் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இவ்விருவரும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தங்கள் ஆதரவாளர்களுடன் வந்த நிலையில், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி மோதல் வெடித்தது. தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.