காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் தொன்மை வாய்ந்த,, வரலாற்று சிறப்புமிக்க பல கோவில்கள் உள்ளன. அந்த வகையில் கச்சபம் என்றால் ஆமை என்பதை குறிக்கும்
பெருமாள் ஆமை வடிவில் சிவனை வழிபட்டு முக்தி பெற்ற கோவில் கச்சபேஸ்வரர் கோவில்.
இந்தக் கோவிலின் தெப்ப உற்சவம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் பங்குனி மாதம் முன்னிட்டு சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு 5 முனைகளைக் கொண்ட சர்வதீர்த்த குளக்கரையில் உள்ள தெப்பலில் எழுந்தருளினார்.
குளத்தில் மூன்று முறை தெப்பலில் கட்சபேஸ்வரர் சுற்றி வந்து குளம் பகுதிகளில் காத்திருந்த மக்களுக்கு தரிசனம் அளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.