திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிறுமி மாயமான சம்பவம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி குடும்பத்தார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மரவனூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை இருவர் கடத்திச் சென்றதாக, சிறுமியின் தாயார் மணப்பாறை காவல் நிலையத்தில் கடந்த மார்ச் 29-ம் தேதி புகார் அளித்தார்.
இருப்பினும் ஒரு வாரமாக சிறுமியை மீட்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, அவரது குடும்பத்தார் திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற மணப்பாறை போலீசார், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.