கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் முதியோர் இல்லத்திற்கு தேவையான பொருட்கள் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
புண்ணியம் பகுதியில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்திற்கு கடந்த 15-ம் தேதி வந்த நபர் ஒருவர், தன்னை சி.ஆர்.பி.எஃப் வீரர் என கூறியுள்ளார். மேலும், முதியோர் இல்லத்திற்கு தேவையான மின் சாதனப் பொருட்களை குறைந்த விலைக்கு கொடுப்பதாக கூறி நாற்பத்து மூன்றாயிரம் ருபாய் மோசடி செய்துள்ளார்.
இந்நிலையில், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பாருக்கு வந்த மோசடி நபரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.