கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற முத்திரை ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
பஸ்தி பகுதியில் உள்ள தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில், தருமபுரியைச் சேர்ந்த தமிழ் செல்வன் முத்திரை ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இவர் தன்னுடன் பணியாற்றிய ஓய்வுபெற்ற அரசு ஊழியரான நாகராஜனிடம் அவரது கோப்புகளை சமர்பிக்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் நாகராஜன் அளித்த புகாரின் பேரில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.