வேலூர் மாவட்டம், எர்த்தாங்கல் கிராமத்தின் கயிலாதநாதர் கோயிலில் உள்ள அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்ததைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இந்த தகவல் காட்டுத் தீயாய் பரவியதையடுத்து குவிந்த ஏராளமான மக்கள் தங்களது செல்போன்களில் வீடியோவும் பதிவு செய்தனர்.
மேலும், குடம் குடமாய் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்த பிறகும் பால் வடிவதாக கோயில் அர்ச்சகர் தெரிவித்ததால், அங்கு கூடியிருந்த பெண்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு நடத்தினர்.