தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜை தொடங்கியது.
இக்கோயில் திருப்பணிகளில் முறைகேடு என்ற குற்றச்சாட்டு தொடர்பாக கும்பாபிஷேகம் நடத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. பின்னர் அந்த தடை நீக்கிக்கொள்ளப்படவே, வரும் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் 5 கட்டங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. முதல் நாள் யாகசாலை பூஜையில் 91 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு 250 சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.