கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றபோது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 13ம் தேதி நடைபெறுகிறது.