மும்பையில் நடைபெற்று வரும் LAKME FASHION ஷோவில், பேஷன் மாடல்கள் பலரும் கண்களைக் கவரும் வகையில் உடையணிந்து உற்சாகமாக போஸ் கொடுத்தனர் .
LAKME FASHION WEEK என்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான நிகழ்ச்சி மும்பையில் 5 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் பேஷன் மாடல்கள் பலரும் கலந்து கொண்டனர். கண்களைக் கவரும் வகையில் விதவிதமான உடையணிந்து உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.