திருப்பத்தூர் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவை ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.
சின்னகுனிச்சி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது. இதில், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
குறைந்த நேரத்தில் இலக்கை நோக்கிச் சீறிப்பாய்ந்து முதலிடத்தைப் பெற்ற காளையின் உரிமையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. 2வது பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், 3வது பரிசாக 55 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
இந்த விழாவைத் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டுகளித்தனர்.