ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பலமணி நேரமாகப் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இதனால் வாகனத்தை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். இதையடுத்து மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.