கொச்சின் மினரல்ஸ் மோசடி தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி பாஜக இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பினராயி விஜயனின் மகளுக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் நிறுவனம் முறைகேடாகப் பணம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடிக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகம் அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது போலீசார் தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் கலைக்க முயன்றனர்.