வேலூரில் தொழிலாளர்களின் போராட்டத்தை போலீசார் திசை திருப்ப முயல்வதாகக் கூறி, 200-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள இச்சி புத்தூரில் உருளிப்பட்டை தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்குச் சம வேலைக்குச் சம ஊதியம், நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தொழிற்சாலை நிர்வாகத்தினர் அளித்த பொய் புகாரைப் பெற்றுக்கொண்டு, போலீசார் தொழிலாளர்களின் போராட்டத்தைத் திசை திருப்ப முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைக் கண்டித்து 200-க்கும் மேற்கொண்ட ஒப்பந்த பணியாளர்கள் கிராமிய காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.