புதுச்சேரியில் பேராசிரியர் வீட்டிலிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலாப்பட்டில் அமைந்துள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் சித்தார்த் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், 33 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி போலீசார் குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.