கர்நாடக மாநிலம், மண்டிபேட் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பர்தா அணிந்து வந்த கும்பல் ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிச் சென்றனர்.
ரவி ஜுவல்லர்ஸ் என்ற நகைக் கடையின் உரிமையாளர் கடையின் வரவு செலவு கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 1 கிலோ 250 கிராம் எடையுள்ள நகைகள் குறைந்தது தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பர்தா அணிந்தபடி நுழைந்த கும்பல் ஒன்று கடையின் ஊழியரைத் திசை திருப்பி அங்கிருந்த நகைப் பெட்டியை திருடிசென்றது பதிவாகியிருந்தது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.