நேபாளத்தில் மன்னராட்சியை அமல்படுத்தக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த போராட்டங்களுக்கு ராஷ்ட்ரீய பிரஜா தந்திர கட்சியும் ஆதரவு அளித்து வருகிறது. மன்னராட்சியை மீட்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆனால், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, நேபாளத்தின் அரசமைப்புச் சட்டம் மன்னராட்சியை அங்கீகரிக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ராஷ்ட்ரீய பிரஜா தந்திர கட்சியினரை விடுதலை செய்யக் கோரி போராட்டம் நடைபெற்றது.