பிரதமர் மோடி இலங்கை சென்றுள்ள நிலையில் நல்லெண்ண அடிப்படையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 2 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த மாதம் 20ம் தேதி எல்லை தாண்டி நுழைந்ததாக 2 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளதை ஒட்டி நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையிலிருந்த 11 தமிழக மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். அதேபோல புழல் சிறையிலிருந்த 2 இலங்கை மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்