ஆம்பூர் அருகே சாமியார்களின் பேச்சைக் கேட்டு நகை அடகுக் கடை உரிமையாளரை வெட்டி கொலை செய்ய முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்பூர் பஜாரில் நகை அடகுக்கடை நடத்திவரும் அருண் என்பவரை, கடந்த 26-ம் தேதி சிலர் வெட்டிக் கொலை செய்ய முயன்றனர். இதில் படுகாயமடைந்த அருண் மீட்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீசாரின் விசாரணையில் சொத்து தகராறு காரணமாக அவரது தாய்மாமன் விஜயகுமார் என்பவரே கூலிப்படையை ஏவிக் கொல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
சொத்து பிரச்சினை தீர வேண்டும் என்றால் அமாவாசைக்குள் அருணை கொலை செய்ய வேண்டும் என சில சாமியார்கள் தெரிவித்ததாகவும், அதன்படியே கொலை செய்ய முயன்றதாகவும் கைதான விஜயகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.