தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சாலையோரம் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சூரமங்களத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருச்செந்தூர் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எட்டயபுரம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ராஜ்குமாரின் மனைவி மற்றும் 5 வயதுக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து அறிந்த போலீசார் காயமடைந்த 6 பேரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.