கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் கழிவறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மலை அடிவாரத்தில் முறையான கழிப்பறை வசதி இல்லாததால் அங்குச் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இங்குக் கழிவறை அமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.