பாம்பன் புதிய ரயில்வே பாலத்தைத் திறந்து வைப்பதற்காகப் பிரதமர் மோடியின் வருகையையொட்டி ராமேஸ்வரம், அக்காள் மடம், தங்கச்சி மடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் தங்களின் வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
அதன்படி பிரதமரின் ஹெலிகாப்டர் நிற்கும் இடத்திலிருந்து ராமேஸ்வரம் கோயில் வரை மத்திய, மாநில உளவுத்துறை, மத்திய பாதுகாப்புப் படை, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு, மோப்பநாய் குழுவினர், வெடிகுண்டு தடுப்பு குழுவினர் என 4 ஆயிரத்து 300 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.