ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் ஆளுநர் ஆர்.என். ரவி சுவாமி தரிசனம் செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராமேஸ்வரம் வருகை தந்தார்.
இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது, கோயில் சார்பில் அவருக்குச் சிறப்பு மரியாதை செய்யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.