நித்தியானந்தா பீடத்திற்கு சொந்தமான சொத்துக்களை தமிழக அரசு கையகப்படுத்தப்பட வேண்டும் என இந்து துறவி பக்தர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், நித்தியானந்தாவுக்குச் சொந்தமான தியான பீடம் இந்து அமைப்பை சார்ந்தது அல்ல என்பது HRNCE வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனு மூலமாகத் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்து மதத்திற்குச் சேவை செய்வதாக கூறி தமிழகத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை நன்கொடையாக நித்தியானந்தா பெற்றுள்ளதாகவும், நன்கொடையாக அளிக்கப்பட்ட நிலங்களைத் தமிழக அரசு மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.