ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சந்தை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
கருமாண்டி செல்லிபாளையத்தில் உள்ள வாரச்சந்தையில் முத்துச்சாமி என்பவருக்குச் சொந்தமான இறைச்சிக் கடை செயல்பட்டு வந்தது.
இக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அடுத்தடுத்து உள்ள கடைகளில் தீ பரவ தொடங்கியது. விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 10 கடைகள் முற்றிலும் எரிந்து சேதமானதால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.