சென்னை பல்லாவரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் ஆயிரத்து 382 யோகாசனங்களை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்துகொண்டே செய்து சாதனை படைத்தார்.
கீழ் கட்டளையைச் சேர்ந்த தமிழ்மணி என்ற மாணவி, உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு யோகா செய்து சாதனை படைக்க விரும்பினார். அதன்படி ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து கொண்டே மாணவி யோகாசனங்களைச் செய்தார்.
ஒவ்வொரு அடிக்கும் வெவ்வேறு யோகாசனம் என மொத்தமாக ஆயிரத்து 382 யோகாசனங்களை மாணவி செய்து அசத்தினார். இவரின் இந்த சாதனையை நோவா உலக சாதனைக் குழு அங்கீகரித்து மாணவிக்குச் சான்றிதழ் வழங்கியது.