பாரதிய ஜனதா கட்சி, மென்மேலும் வளர்ந்திட பாடுபடுவோம் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
1980-ஆம் ஆண்டு இதே நாளில், நம் தேசத்து மக்களின் முன்னேற்றத்தையும், தேச ஒற்றுமையையும் முன்னிறுத்தி தொடங்கப்பட்ட நமது பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினம் இன்று.
அன்றிலிருந்து தற்போது வரை நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதில் முழுமையான ஈடுபாட்டுடன் நமது கட்சி இயங்குவதற்கு காரணமான முன்னாள் தலைவர்களையும், உயிர் தியாகங்கள் செய்த பல்வேறு நிர்வாகிகளையும் இத்தினத்தில் நினைவில் கொள்வோம். நமது பாரதிய ஜனதா கட்சி, மென்மேலும் வளர்ந்திட பாடுபடுவோம் என்று எல். முருகன் தெரிவித்துள்ளார்.