ராம நவமியை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ராம நவமி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இது குறித்து மத்திய அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
புனிதம் நிறைந்த ஶ்ரீ ராமநவமி தினமான இன்று, ஶ்ரீ ராமபிரானின் பூரண அருள் கிடைத்து, நாட்டு மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியமும், மகிழ்வும் பெற்று இன்புற வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன். ஜெய் ஶ்ரீராம் என்று எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்
பகவான் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த ஶ்ரீ ராம நவமி நன்னாளில், அனைவருக்கும் ராமபிரானின் அருளும் ஆசியும் குறைவின்றிக் கிடைக்கவும், அனைவரின் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும், வளமும் கிடைக்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஶ்ரீராம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.