பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கட்சியை வலுப்படுத்துவதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அனைவரையும் இந்நாளில் நினைவு கூர்வதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முக்கிய நாள் இந்தியாவின் முன்னேற்றத்தை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் முதுகெலும்பாக இருக்கும் அனைத்து காரியகர்த்தாக்களுக்கும் வாழ்த்துகள் எனப் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.