விடுமுறை தினத்தை ஒட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வார விடுமுறையை ஒட்டி அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்தனர். அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது.
விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.